ஜேர்மன் பூங்காவிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: 11,000 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் Bottrop நகரில் அமைந்துள்ள தீம் பார்க்கில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கு வந்திருந்த 11,000 ஆயிரம் பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

உள்ளூர் நேரப்படி 5:15 p.m மணியளவில் amusement தீம் பார்க்கில் வெடிகுண்டு வெடிக்கவிருப்பதாக தொலைபேசி வழியாக தகவல் வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும் பாதுகாப்பு துறையினர் தீம் பார்க்கின் முக்கிய இடங்களை சோதனையிட்டனர்.

மேலும், அங்கிருந்த சுமார் 11,000 ஆயிரை பேரை உடனடியாக பார்க்கில் இருந்து வெளியேற்றியுள்ளனர். மேலும் அங்கு ஹலோவீன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியும் தடைசெய்யப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்