100 நோயாளிகளை நான்தான் ஊசிப்போட்டு கொலை செய்தேன்: நர்ஸின் திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியில் 100 நோயாளிகளுக்கு வீரியமிக்க மருந்தை கொடுத்து கொலை செய்த சம்பவத்தில் உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீல்ஸ் ஹோகெல் (41 என்ற ஆண் நர்ஸ் கடந்த 2005-ம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் நோயாளிக்கு பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி போட்டபோது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

இதனால், இவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், விசாரணை நடைபெற்று நர்ஸ் குறித்து சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

2000 முதல் 2005-ம் ஆண்டு வரை 65 பேரும், ஒல்டன்பர்க் மருத்துவமனையில் 35 பேரும் இவரால் உயிரிழந்தது தெரியவந்தது. மொத்தம், 100 பேரை கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரண தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அதிரடி திருப்பமாக குற்றவாளி தனது குற்றத்தி ஒப்புக்கொண்டுள்ளார்.

நான்தான் 100 நோயாளிகளையும் கொன்றேன். அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு வீரியமிக்க ஊசி போட்டு, அவர்களை மரணத்தின் விளிம்பு வரை கொண்டு சென்று மீண்டும் பிழைக்க வைத்துள்ளார்.

தன்னுடன் பணிபுரிந்த சக பணியாளர்களை கவர நினைத்து நீல்ஸ் ஹோகெல் இவ்வாறு செய்துள்ளார். ஆனால், தொடர்ச்சியாக 100 பேர் மரணமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் 34 வயது முதல் 96 வயதுக்குட்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வழக்கு விபரம்

2005 ஆம் ஆண்டு டெல்மென்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான வீரியம் கொண்ட மருந்து கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்குப் பின்னர், 2008 ஆம் ஆண்டு ஹோகெலுக்கு கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

இவரது மனநலம் குறித்து சோதனைசெய்யப்பட்டபோது 30 பேரை கொலை செய்யதாக ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்த வந்த இவர் குறித்தும், இவர் பணிபுரிந்த மருத்துவமனையில் நடைபெற்ற கொலை சம்பவங்கள் குறித்து தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 என தெரியவந்தது.

மேலும், வழக்கில் திருப்பமாக, 100 பேரையும் நான் தான் கொலைசெய்தேன் என குற்றவாளி ஒப்புக்கொண்டார்.

இதனால், வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers