ஜேர்மனியில் தொடரும் போராட்டங்கள்: பின்னணி என்ன?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் தொடர்ந்து மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஜேர்மனியின் Freiburg நகரில் சுமார் 2000 பேர் தெருக்களில் இறங்கி, 18 வயது ஜேர்மன் மாணவி ஒருத்தி கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

போராட்டங்கள் முடிந்தபின் திங்களன்று மாலையில் AfD கட்சியைச் சேர்ந்தவர்கள் நாட்டின் பாதுகாப்புக்காக பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி என்று பேஸ்புக்கில் வீடியோக்களை வெளியிட்டு நன்றி தெரிவித்துக் கொண்டனர். ஆனால் உண்மையில் தெருவில் இறங்கிப் போராடிய 2000 பேருமே ஒரே நோக்கத்திற்காக போராடியவர்கள் அல்ல.

ஜேர்மன் மாணவி ஒருத்தி ஏழு சிரியர்கள் மற்றும் ஒரு ஜேர்மானியர் என எட்டு பேரால் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் வெறும் 500 பேர்தான்.

அந்த 500 பேரும் AfD கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்களை எதிர்த்து பேரணி நடத்தியவர்கள்தான் மீதமுள்ள 1500 பேரும். இது சாக்ஸனி அல்ல, உங்கள் லாபத்திற்காக எங்களைப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று எழுதப்பட்ட அட்டைகளுடன் அவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அரசியல் லாபத்திற்காக, நாட்டில் நடந்த ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள் என, AfD கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதேபோல் போராட்டத்திற்கு இன்னொரு காரணம், ஏஞ்சலா மெர்க்கலின் அகதிகள் கொள்கையால் ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்பட்ட அகதிகளால் ஜேர்மனியில் வாழ்வோரின் பாதுகாப்பு பிரச்சினைக்குள்ளாகியுள்ளது என்பதைக் காட்டுவதற்காகவும்கூட.

ஏனென்றால் இப்படிப்பட்ட ஒரு துயர சம்பவம் ஜேர்மனியில் நடப்பது இது முதல் முறையல்ல, 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், Hussein K என்று அழைக்கப்படும் ஆப்கன் அகதி ஒருவன் 19 வயது இளம்பெண் ஒருவரை வன்புணர்வு செய்து, சுய நினைவற்ற நிலையில் கிடந்த அவளை நதியில் வீசிச் சென்று விட, அவள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இப்படிப்பட்ட துரதிர்ஷ்ட சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படும் அதே நேரத்தில், போராட்டங்கள் நடத்துவோரில் ஒரு பகுதியினர், பெரும் பகுதியினர் என்று கூட சொல்லலாம், ஆங்காங்கு நடைபெறும் இது போன்ற ஒன்றிரண்டு குற்றச் சம்பவங்களால் அனைத்து அகதிகளையும் அதே கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என்பதை வலியுறுத்துவதற்காகவும் திரள்வது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers