இழிவு செயல்களை செய்பவர்களை எமது நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும்: ஜேர்மன் குடிவரவு ஆணையர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மன் நாட்டில் Freiburg நகரில் 18 வயது இளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டின் குடிவரவு ஆணையர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை ஆகிய இரண்டையும் ஜேர்மனியில் சகித்துக்கொள்ள முடியாது என்பதை புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு கற்பிக்க வேண்டும் என குடிவரவு ஆணையர் Annette Widmann-Mauz தெரிவித்துள்ளார்.

18 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 7 சிரிய புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் ஒரு ஜேர்மன் குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை வாங்கிகொடுக்க வேண்டும்.

மேலும், எமது நாட்டிற்கு வந்து இதுபோன்ற இழிவு செயல்களை ஈடுபடுபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படவேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் Cologne நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது புகலிடக்கோரிக்கையாளர்கள் பாலியல் வன்கொடுமை நடத்தினர்.

இந்த கொண்டாட்டத்தின்போது 24 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது ஜேர்மன் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers