தன்னை விட மூத்த நண்பனைக் கொலை செய்த சிறுவன்: வெளியான அதிர்ச்சிக் காரணம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தன்னை விட மூத்த நபருடன் நட்பு கொண்டிருந்த ஒரு சிறுவன், அவருடன் உறவு கொள்ள விருப்பம் தெரிவித்தபோது அவர் மறுப்பு தெரிவித்ததால் அவரைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்த சம்பவம் ஜேர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Wendenஇலுள்ள Gesamtschule பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் ஒருவன் வீடு திரும்பாததால் அவனது பெற்றோர் பொலிசில் புகாரளித்தனர். அவனது நண்பனான 14 வயது மாணவன் ஒருவனை சாட்சியமாக கருதி பொலிசார் விசாரிக்கும்போது அவனது வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதைக் கண்டனர்.

பின்னர் அவனிடம் தொடர்ந்து விசாரிக்கும்போது தாங்கள் இருவரும் பள்ளிக்கு கட் அடித்துவிட்டு சென்றதாகவும், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆளுக்கொரு திசையில் சென்று விட்டதாகவும் கூறினான்.

பள்ளியிலிருந்து சற்று தொலைவில் காணாமல் போன மாணவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவன் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து இறந்த மாணவனின் நண்பனை விசாரித்தபோது, அவன் தன் நண்பனுடன் பாலுறவு கொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும், அதற்கு அவன் மறுத்துவிட்டதால் அவனைக் கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டான். அவனைக் கைது செய்த பொலிசார் காவலில் வைத்துள்ளனர்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவனுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.

14 வயது மாணவனாக இருந்தாலும், 16 வயது மாணவனை விட வாட்டசாட்டமாக இருந்த அந்த சிறுவன், தன் நண்பனை வெறும் கைகளால் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ள சம்பவம் Wenden பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்