புவி வெப்பமயமாதலின் விளைவுகளை கண்முன் காட்டும் ஜேர்மன் நீர் நிலைகள்: ஒரு எச்சரிக்கை செய்தி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

புவி வெப்பமயமாதலின் கோர விளைவுகளை கண்முன் காட்டுகின்றன உலர்ந்து போயிருக்கும் ஜேர்மனியின் நீர் நிலைகள்.

புவி வெப்பமயமாதலை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவரையில் உங்களுக்கும் இதுதான் கதி என உலக நாடுகள் அனைத்திற்கும் உரத்துக் கூறுகின்றன வெளியாகியுள்ள புகைப்படங்கள்.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் நீர் வற்றிப்போயிருக்கும் நீர் நிலைகளால் நாட்டின் கப்பல் வணிகத்திற்கு சொல்லொணா அளவில் இழப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பல பில்லியன் யூரோக்கள் நஷ்டம்.

நாட்டின் 90 சதவிகித பகுதிகள் கிட்டத்தட்ட இந்த ஆண்டில் வறண்டு விட்டன. Magdeburg பகுதியில் ஜூன் மாத இறுதி முதல் Elbe நதியில் தண்ணீர் வற்றியுள்ளதால், Leipzigகுக்கோ செக் குடியரசுக்கோ சரக்குக் கப்பல்கள் போக இயலவில்லை.

அந்த நதியில் 50 சென்றிமீற்றர் அளவுக்கு தண்ணீர் வற்றி விட்டது, சாதாரணமாக கப்பல் போக்குவரத்துக்கு அதைவிட இருமடங்கு தண்ணீர் இருக்க வேண்டும்.

இதே நிலைதான் ஜேர்மனி முழுவதும் உள்ள அனைத்து நதிகளிலும் காணப்படுகிறது. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த தண்ணீர் பிரச்சினையால் விவசாயமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கான தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, இந்த ஆண்டில் தானிய உற்பத்தியும் 36 மில்லியன் டன்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers