சவுதி நாட்டுடன் சரியான தொடர்பு இல்லாதபோதும் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் ஜேர்மன்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியின் ஆயுதப் படைகள் சவுதி இராணுவ அதிகாரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகின்றன.

பத்திரிகையாளர் கொலை விவகாரத்தில் ஆயுதங்களை சவுதி நாட்டுக்கு அனுப்புவதற்கு ஜேர்மன் மறுப்பு தெரிவித்திருந்தபோதிலும், சில அரசியல் காரணங்கள் கருத சவுதி இராணுவ வீரர்களின் பயிற்சி தொடர்ந்து ஜேர்மனில் நடைபெற்று வருகிறது.

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் முடியாட்சியை எதிர்த்து கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார்.

பத்திரிகையாளரின் மரணத்துக்கு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரெஜ் பேபிஸ் உடன் ஜேர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கொலையில் உள்ள மர்மங்கள் நீக்கப்படும் வரையில் சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.

480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான ஆயுதங்களை சவுதிக்கு ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் ஜேர்மனி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஏழு சவுதி அதிகாரிகளை ஹம்பேர்க்கில் உள்ள ஜேர்மன் அகாடமியில் பயிற்றுவித்து வருகின்றனர்.

2019 ல் ஜேர்மனியில் நீண்டகால உத்தியோகபூர்வ பயிற்சியை தொடங்கி வைப்பதற்கு ஜேர்மனியை முன்னுரிமை என்று வீரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

திட்டமிட்டபடி உட்பட்ட பயிற்சி தொடரும் என அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

சவுதி அரேபியர்கள் 2016 ஆம் ஆண்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தின் கீழ் உள்ளனர். இதில் சவுதி அரேபியா ஒவ்வொரு ஆண்டும் ஜேர்மனியில் இராணுவப் பல்கலைக் கழகங்களில் ஒரு சில துருப்புக்களை பயிற்றுவிக்கும் செலவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers