99 வயதான முன்னாள் நாஜி வீரரிடம் விசாரணை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

1942ஆம் ஆண்டு நாஜிக்கள் வதை முகாமில் 60 ஆயிரம் பேர் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக juvenile நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

99 வயதான முன்னாள் நாஜிக்கள் முகாமில் பணியாற்றிய நபர் இதுதொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டதையடுத்து குறித்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

குறித்த நபருக்கு 21 வயது இருக்கையில் நாஜிக்கள் முகாமில் பணியாற்றியுள்ளார். அதன்போது, 60 ஆயிரம் பேர்கள் விஷ ஊசிபோட்டும், ஆடைகள் இல்லாமல் வெயிலில் வைத்து சித்ரவதை செய்தும் கொலை செய்யப்பட்டனர்.

ஆனால், குறித்த நபர் இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லாதபோதிலும் முன்னாள் நாஜி வீரர் என்ற அடிப்படையில் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers