ஹிட்லர் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய அரசியல்வாதி

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் AfD கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஹிட்லர் புகைப்படம் பதியப்பட்ட ஒயின் பாட்டிலுடன் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Jessica Bießmann என்ற பெண்மணி AfD கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஆவார். ,இவர் 2016 ஆம் ஆண்டு பெர்லின் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர், ஒயின் பாட்டிலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டது, ஆனால் அதில் உள்ள நான்கு பாட்டில்களில் ஹிட்லரின் உருவம் பதியப்பட்டிருந்தது.

இது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து குறித்த நபர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ஹிட்லர் படம் இருந்ததை நான் கவனிக்கவில்லை, இந்த புகைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எனது நண்பரின் வீட்டில் எடுக்கப்பட்டது.

அந்த புகைப்படத்தை தற்போது மீண்டும் பதிவேற்றம் செய்துள்ளனர் என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers