ஜேர்மனி ஏன் முதல் உலகப்போர் நினைவு நாளை அனுசரிக்கவில்லை?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

உலக நாடுகள் பலவும் முதல் உலகப்போரில் உயிர்த்தியாகம் செய்த போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் நினைவு நாளை அநுசரிக்கும் நிலையில் ஜேர்மனி மட்டும் ஏன் அதை அநுசரிக்கவில்லை?

முதல் உலகப்போரில் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஓரணியிலும், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா - ஹங்கேரி முதலான நாடுகள் எதிரணியிலும் போரிட்ட நிலையில் ஜேர்மனி கடும் பின்னடைவை சந்தித்தது.

அதனால்தான் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் போரில் பங்கேற்றாலும், ஜேர்மனி, நினைவு நாளைக் கொண்டாடவில்லை.

பெரும்பாலான ஜேர்மானியர்கள் இரண்டாம் உலகப்போருக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இந்நிலையில் பிரான்சில் நடைபெறும் முதல் உலகப்போர் நினைவுநாளில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் கலந்து கொண்டதையே பலர் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அது முதல் உலகப்போரில் வென்றவர்களுக்கான நிகழ்ச்சி, அதில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் கலந்து கொண்டிருக்கக்கூடாது என்கிறார் AfD கட்சியின் தலைவர்களில் ஒருவரான Alexander Gauland.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்