ஜேர்மனியில் மரண தண்டனை ரத்து

Report Print Balamanuvelan in ஜேர்மனி

மரண தண்டனை சட்டப்பூர்வமானதாக இருந்த ஜேர்மனியின் கடைசி மாகாணமும் ஒருமனதாக வாக்களித்ததையடுத்து ஜேர்மனியில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.

Frankfurt நகரத்தை உள்ளடக்கிய Hesse மாகாணத்தின் வாக்காளர்களில் 83 சதவிகிதத்தினர் மரண தண்டனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

பிரித்தானியா உட்பட அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் மரண தண்டனை தடை செய்யப்பட்டு விட்டது.

Hesseயைப் பொருத்தவரையில் அங்குள்ள மக்களுக்கு, மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்ட பிறகு ஒருவேளை ஒரு பயங்கர குற்றம் நிகழ்ந்து விட்டால், அப்புறம் வாக்களித்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே என்ற ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது, அதனால்தான் அதை ஏற்றுக் கொள்வதற்கு இவ்வளவு காலமாயிற்று என்கிறார் Hesseயின் குடும்ப நலம் மற்றும் பணித்துறை அமைச்சரான Juergen Banzer.

அது மட்டுமின்றி அப்படி ஒரு வாக்களிப்பு தேவையற்றது, காரணம் நாட்டின் சட்டம் மாகாண அரசியல் சாசனங்களைவிட பெரியது என்கிறார் அவர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers