உலகை உலுக்கிய 100 நோயாளிகளை கொலை செய்த சம்பவம்! உறவினர்களிடம் மன்னிப்பு கோரிய செவிலியர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் 100 நோயாளிகளை கொலை செய்த ஆண் செவிலியர் இறந்துபோன நோயாளிகளின் உறவினர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

நீல்ஸ் ஹோகெல் (41 என்ற ஆண் நர்ஸ் கடந்த 2005-ம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் நோயாளிக்கு பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி போட்டபோது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

இதனால், இவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

2000 முதல் 2005-ம் ஆண்டு வரை 65 பேரும், ஒல்டன்பர்க் மருத்துவமனையில் 35 பேரும் இவரால் உயிரிழந்தது தெரியவந்தது. மொத்தம், 100 பேரை கொலை செய்துள்ளார்.

உலகை உலுக்கிய இந்த வழக்கு விசாரண தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இவர் தனது குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.

நான்தான் 100 நோயாளிகளையும் கொன்றேன். அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு வீரியமிக்க ஊசி போட்டு, அவர்களை மரணத்தின் விளிம்பு வரை கொண்டு சென்று மீண்டும் பிழைக்க வைத்துள்ளார்.

தன்னுடன் பணிபுரிந்த சக பணியாளர்களை கவர நினைத்து நீல்ஸ் ஹோகெல் இவ்வாறு செய்துள்ளார். ஆனால், தொடர்ச்சியாக 100 பேர் மரணமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் 34 வயது முதல் 96 வயதுக்குட்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து ஜேர்மன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், செவிலியர் தான் கொலை செய்த குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இன்று நீதிமன்றத்திற்கு வந்த அவர், நான் கொலை செய்த 100 உறவினர்களின் நோயாளிகளிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் அவர்களை கொலை செய்யும் போது அது எனக்கு மன ரீதியாக எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. தற்போது மன்னிப்பு கேட்பதை தவிர வேறு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்