சாகஸ முயற்சியின்போது ஜேர்மனி வீரர் பலி: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் சாகச விரும்பி ஒருவர் மலையுச்சியிலிருந்து குதிக்கும் முயற்சியின்போது பரிதாபமாக உயிரிழந்தார்.

பேஸ் ஜம்பிங் என்று அழைக்கப்படும் சாகஸ விளையாட்டு வீரரான ஜேர்மனியைச் சேர்ந்த Dominik Loyen (50) என்பவர் போர்ச்சுகலில் மலையுச்சியிலிருந்து குதிக்கும்போது பரிதாபமாக உயிரிழந்தார்.

பல நாடுகளில் பேஸ் ஜம்பிங் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், அவ்விளையாட்டு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் Dominik, ஸ்பெயினில் அந்த விளையாட்டைக் கற்றுக் கொடுக்கும் ஒருவராக பணிபுரிந்தார்.

Nazaré என்னுமிடத்தில் அவர் இன்னொரு விளையாட்டு வீரருடன் மலையுச்சியிலிருந்து குதிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சரியாக தரையிறங்குவதற்கு சற்றுமுன், அந்த இன்னொரு விளையாட்டு வீரரின் பாராசூட் விரிய, எதிர்பாராத விதமாக Dominikஇன் பாராசூட் சரியான நேரத்தில் விரியவில்லை. தரையில் மோதி விழுந்த Dominikஐ மருத்துவ உதவிக் குழுவினர் மீட்க எடுத்த முயற்சி வெற்றியடையாததால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சில ஆண்டுகளுக்குமுன் இந்த விளையாட்டை விளையாடுவதை நிறுத்திவிட Dominik திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers