முகாமில் இருந்த 36000 பேரை கொடூரமாக கொலை செய்த நாஜி படை காவலர்

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஆஸ்திரியா முகாமில் அடைக்கப்பட்டிருந்த 36 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளை, 95 வயதான முன்னாள் நாஜி காவலர் கொடூரமாக கொலை செய்ததாக பெர்லினின் வழக்கறிஞர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

1944 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து 1945 ஆம் ஆண்டுவரை வடக்கு ஆஸ்திரியாவில் உள்ள மிகப்பெரும் முகாமில், முன்னாள் நாஜி காவலர் 36,223 கைதிகளை கொடூரமாக கொலை செய்ததாக பெர்லின் வழக்கறிஞர் அலுவலகம் கூறியுள்ளது.

தற்போது 95 வயதை அடைந்திருக்கும் ஹான்ஸ் வெர்னெர் எச், லின்ஸில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருந்த மிகப்பெரிய Mauthausen கைதிகள் முகாமில் காவலராக இருந்து வந்துள்ளார். இங்கு 14,000 யூதர்கள் உட்பட, சுமார் 95,000 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர்.

முகாமில் இருந்த மக்களை பல்வேறு சோதனைக்கு உட்படுத்துதல்,, விஷ வாயுவை பயன்படுத்துதல், துப்பாக்கியால் சுடுதல், பட்டினி போடுதல் உள்ளிட்ட துன்புறுத்தல்களால் கொலை செய்துள்ளார் என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில் ஜேர்மனியின் புதிய சட்டபடி, நாஜி முகாம்களில் கைதிகளை கொலை செய்த காவலர்களுக்கு போதிய ஆதாரம் இல்லாவிட்டாலும் கூட அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் நாஜி காவலர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் வயது முதிர்ச்சியின் காரணமாக அதற்கு முன்னதாகவே இறந்துவிட்டார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்