பில்லியனர் மகன் கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு தண்டனை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் பில்லியனர் மகன் கடத்தல் வழக்கில் மர்மம் நீடித்து வரும் நிலையில் அதில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜேர்மன் பில்லியனர் Reinhold Würth யின் மகன் Markus Würth மகன் கடத்தப்பட்டான். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன் கிடைக்க வேண்டுமென்றால் 3 million யூரோ கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தது கடத்தல்கும்பல்.

ஆனால், அடுத்தநாளே Bavarian நகரில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் சிறிய காயங்களுடன் சிறுவன் மீட்கப்பட்டான்.

ஆனால், கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், செர்பியா நாட்டை சேர்ந்த 48 வயது நபர், 3 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers