ரஷ்ய அழகியை மணந்துகொண்ட மலேஷிய அரசர் திருமணத்திற்குப்பின் செய்த முதல் செயல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

மலேஷிய மன்னரை மணந்து உலக கவனம் ஈர்த்த ரஷ்ய அழகியும் கணவரும் திருமணம் முடிந்த கையோடு முதல் வேலையாக ஜேர்மனிக்கு வந்துள்ள காரணம் வெளியாகியுள்ளது.

முன்னாள் மிஸ் மாஸ்கோவான Oksana Voevodina இஸ்லாம் மதத்திற்கு மாறி, மலேஷிய மன்னரான Tengku Muhammad Faris Petra ibni Tengku Ismail Petra என்பவரை மணந்து கொண்டார்.

திருமணம் முடித்த கையோடு ஜேர்மனிக்கு வந்துள்ள தம்பதி குழந்தையின்மை மருத்துவமனை ஒன்றிற்கு வந்துள்ளது.

Sultan Muhammad V என்று அழைக்கப்படும் மலேஷிய மன்னரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், அவருக்கு குழந்தைகள் இல்லை.

குழந்தைகள் மீது அதிக விருப்பம் கொண்ட மன்னர், இதற்காகவே ஜேர்மனிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னருக்கு 49 வயதாகும் நிலையில் அவரது மனைவியான Oksanaவுக்கு 25 வயதுதான் ஆகிறது.

மன்னரைவிட Oksana 24 வயது குறைந்தவர். இந்நிலையில் குழந்தை பெறுவது தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக தம்பதியினர் ஜேர்மனி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers