சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்த நபர் கைது

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் புலம்பெயர்ந்தோர் என்ற தளத்தின் வாயிலாக சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்த நபரின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

35 வயதுடைய குறித்த நபர் Migrantenschreck என்ற பெயரில் இணையதளம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதனை மொழிபெயர்த்தால் புலம்பயர்ந்தோர் ஆகும்.

இந்த தளத்தில், 193 துப்பாக்கிகள், gas-powered pistols, crossbows, rubber ammunitionn போன்றவை விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.

அதனுடன், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காத்துக்கொள்ளுங்கள் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரின் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers