ஜேர்மன் சேன்ஸலர் பயணித்த விமானத்தில் கோளாறு: சதித் திட்டமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் தலைநகரிலிருந்து புறப்பட்ட ஜேர்மன் சேன்ஸலர் பயணித்த விமானம் திடீரென Cologne நகரில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதன் பின்னணியில் சதித் திட்டம் ஏதேனும் இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நேற்றிரவு, ஜேர்மனியிலிருந்து அர்ஜென்டினாவில் நடைபெற இருக்கும் G20 உச்சி மாநாட்டிற்காக புறப்பட்ட ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் பயணம் செய்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

புறப்பட்ட அந்த விமானத்தில் திடீரென மொத்த தொலைக்கட்டுப்பாட்டு அமைப்பும் செயலிழந்தது.

அது மட்டுமின்றி பல்வேறு தொழில் நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டன. இதனால் சேட்டிலைட் போன் உதவியுடன் Cologneஇல் உள்ள விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டதையடுத்து, விமானம் உடனடியாக திருப்பப்பட்டு Cologneஇல் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு பெரும் சந்தேகத்துக்கிடமாக அமைந்ததால் பாதுகாப்பு அமைச்சருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மாற்று விமானம் ஒன்றை ஏற்பாடு செய்வதற்கு பல மணி நேரமாயிற்று.

நேற்று இரவு ஏஞ்சலா Bonnஇலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார். மிக நீண்ட பயணம் செல்ல வேண்டியிருந்ததால், அதிக பெட்ரோலுடன் பயணித்ததால், தறையிறங்கும்போதும் பிரேக்குகள் அதிக சூடாவதால் ஒரு வேளை தீ விபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தின்பேரில் முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

விமானத்தில் பெரிய அளவுக்கு கோளாறு ஏற்பட்டிருந்ததையடுத்து, அதன் பின்னணியில் சதித்திட்டம் ஏதேனும் உள்ளதா என்னும் கோணத்திலும் விசாரணை மேற்கோண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஏஞ்சலா தனியார் விமானமொன்றில் பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அவர் 15 மணி நேரப் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளதையடுத்து, அவரால் உலக நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை ஆரம்பித்த பின்னரே, உச்சி மாநாட்டுக்கு சென்று சேர இயலும்.

இதனால் ஜேர்மன் சேன்ஸலர் G20 உச்சி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.


மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்