ஜேர்மனில் போதை மருந்துகளை கடத்தல் அதிகரிப்பு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் சமீபகாலமாக தொடர்ந்து போதை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக சுங்கதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மன் நகரமான ஹாம்பேர்க்கில் உள்ள சுங்க அதிகாரிகள், வெள்ளிக்கிழமை பாரிய போதை மருந்துகளை கண்டுபிடித்தனர்.

ஒரு பெரிய கப்பலின் பின்னால் மறைத்து போதைமருந்து 300 கிலோகிராம் (661 பவுண்டுகள்) கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், டொமினிக்கன் குடியரசில் இருந்து அனுப்பப்பட்ட கொள்கலன்களை எக்ஸ்-ரேய் செய்யும் போது வடக்கு துறைமுக நகரில் உள்ள சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

கொக்கெயின் என்பது கறுப்பு சந்தையில் 63 மில்லியன் யூரோக்கள் ($ 71.6 மில்லியன்) மதிப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers