புகடலிக்கோரிக்கையாளர்கள் இடத்தில் மர்மமாக இறந்து கிடந்த இளம் பெண்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் 17 வயது இளம்பெண் மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பாக 19 வயது கென்யா நாட்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளம்பெண் தனது பெற்றோரிடம், தோழி ஒருவரை பார்த்து விட்டு சென்றுவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் , வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, தேடுதல் நடத்தியதில் 2 நாட்கள் கழித்து Sankt Augustin நகரில் அமைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் இடத்திற்கு அருகில் இப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக 19 வயதான கென்யா நாட்டை சேர்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஏனெனில், இளம்பெண் இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் இவரது வீடு அமைந்துள்ளது. இதனால் இவர் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இதனை தவிர வேறு தகவல்கள் எதனையும் பொலிசார் வெளியிடவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers