அழகால் பிரபலமான பெண் பொலிஸாருக்கு கவர்ச்சி புகைப்படங்களால் வந்த சோதனை

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனியிலே மிகவும் அழகான பெண் பொலிஸ் என அடையாளம் காணப்பட்ட அட்ரியென்னேவிற்கு கால அவகாசம் கொடுத்து பொலிஸார் எச்சரித்துள்ளார்.

ஜேர்மனியின் டிரெஸ்டென் நகர பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் அட்ரியென் கொல்ஸ்சார் (36). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மனியின் கவர்ச்சியான பெண் பொலிஸ் அட்ரியன் தான் என பெயரிடப்பட்டார்.

6 மாதம் விடுமுறை வாங்கிய அட்ரியன், 2019 ஜனவரி மாதம் மீண்டும் பணியில் சேர்வதாக கூறியிருந்தார்.

அவருடைய விடுமுறை காலம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. ஆனால் இந்த விடுமுறையில் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான இன்ஸ்டாகிராம் புகைப்படங்களால், 557,000 பாலோவர்களை பெற்றுள்ளார்.

இதற்கிடையில் ஒரு வீடியோவினை வெளியிட்ட அட்ரியன், நான் என்னுடைய சமூகவலைத்தள பக்கத்தின் மூலமாக தான் தற்போது சம்பாதித்து வருகிறேன். நான் வேலை செய்யும் இடத்தில் இருந்து அல்ல என கூறியிருந்தார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து அட்ரியனை அலுவகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த அதிகாரிகள், ஒன்று இன்ஸ்டாகிராம் மொடலாக இருங்கள், அப்படி இல்லையென்றால் பொலிஸ் பணியில் இருங்கள். இரண்டில் ஒன்றை முடிவு செய்து திங்கட்கிழமைக்குள் பதில் கூறுங்கள் என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்