விமான நிலையத்திற்குள் குடிபோதையில் சென்ற நபரால் பரபரப்பு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் Hannover விமான நிலையத்திற்குள் குடிபோதையில் கார் ஓட்டி சென்ற நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து சுமார் 4 மணிநேரம் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

அனுமதியை மீறி குடிபோதையில் கார் ஓட்டி சென்ற நபரின் வயது 21. போலந்து நாட்டை சென்றவர் என்றும் அவருக்கு ஜேர்மனில் வசிப்பதற்கு வீடு கூட கிடையாது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Greek airline's Airbus A320 என்ற விமானம் 172 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்துள்ளது. இந்த நபரின் செயல்பாட்டால் சுமார் 4 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

குறித்த நபர் எந்த தீவிரவாத பின்னணியிலும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers