2019 ஆம் ஆண்டில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் ஜேர்மன் முதியவர்கள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

2019 ஆம் ஆண்டில் வறுமையை சந்திக்க நேரிடும் என ஜேர்மனிய முதியவர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகரித்துவரும் செலவுகள் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் ஆகியவை நிதி பாதுகாப்பின்மைக்கு அச்சத்தைத் தருகின்றன என பணி ஓய்வு பெறும் முதியவர்கள் தெரிவித்துள்ளதாக Ernst & Young (EY) consulting நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வயதானவர்களை கொண்ட மக்கள் தொகையில், ஜேர்மனியின் ஓய்வூதிய முறை மன அழுத்தத்தில் உள்ளது, உயரும் வாழ்க்கை செலவுகள், குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் தற்காலிக மற்றும் குறைந்த ஊதிய வேலைவாய்ப்பு ஆகியவற்றால் பலர் தங்கள் ஓய்வூதியத்திற்கான நிதி பாதுகாப்பை அடைவதற்கு சவால்களை சந்திக்கின்றனர்.

பல ஜேர்மனியர்கள் தங்களது ஓய்வூதியம் பாதுகாப்பானது என்று இனிமேல் நினைக்கவில்லை என்று பெர்ன்ஹார்ட் லாரென்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers