தந்தை வயது நபருடன் காதலில் விழுந்த அழகிய இளம்பெண்! குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி செய்த செயல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தான் தினமும் பயணிக்கும் பேருந்தின் ஓட்டுநரான ஒருவரை கண்டதும் அந்த இளம்பெண்ணுக்கு காதல் ஏற்பட, குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள், இருவருக்கும் வயது வித்தியாசம்? 23 ஆண்டுகள்...

ஜேர்மனியைச் சேர்ந்த Laura Kreuzter (20) தினமும் பேருந்தில் பயணிப்பதுண்டு. அவர் வழக்கமாக பயணிக்கும் பேருந்தின் ஓட்டுனரான Kai Semmelmann (43)ஐக்கண்டதும் அவருக்கு காதல் வந்திருக்கிறது.

Semmelmannஇன் பேஸ்புக்கை ஆராய்ந்த Laura, அவருக்கு நட்புக் கோரிக்கை விடுத்திருக்கிறார். பின்னர் இருவரும் சந்தித்து, இணைந்து காபி சாப்பிடும்போதே காதலில் விழுந்திருக்கிறார்கள்.

இந்த காதல் குறித்துக் கேள்விப்பட்டதும் Lauraவின் குடும்பத்தார் கடும்எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஒரு ஆண்டுக்கு அவரிடம் பேசவேயில்லை.

இதற்கிடையில் Semmelmannக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, அருகிலேயே இருந்து கண்ணும் கருத்துமாக Laura கவனித்துக் கொள்ள, அவர்கள் இருவருக்கும் இடையிலானகாதல் இன்னும் வலுப்பெற்றிருக்கிறது.

தற்போது Lauraவின் தாய் அவரிடம் பேசத் தொடங்கியிருக்கிறார் என்றாலும், யாரும் Semmelmannஐ தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளவில்லை.

என்றாலும் எதைக் குறித்தும் கவலைப்படாத இந்த வித்தியாசமான ஜோடி உலகத்தையே சுற்றி வந்து புகைப்படங்களாக எடுத்துத் தள்ளி வருகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers