ஒன்லைனில் கசிந்த தனிப்பட்ட தகவல்கள்! அதிர்ச்சியில் ஜேர்மன் அரசியல் பிரமுகர்கள்

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் குறித்த தனிப்பட்ட தகவல்கள், ஆவணங்கள் ஹேக் செய்யப்பட்டு ஒன்லைனில் வெளியிடப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிவிட்டர் கணக்கு ஒன்றில், ஜேர்மனியில் உள்ள உள் கட்சி ஆவணங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளதாக பெர்லின் வானொலி தெரிவித்துள்ளது.

இதனால் Bundestag பாரளுமன்றத்தில் உள்ள வலது சாரி கட்சியான Alternative for Germany கட்சியைத் தவிர, பிற கட்சிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மாலை தான் இந்த தகவல்கள் கசிந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், இவை அனைத்தும் ஏற்கனவே டிசம்பர் 2018-யில் Hamburgஐ அடிப்படையாகக் கொண்ட டிவிட்டர் கணக்கில் வெளிப்படையாகவே Advent-calendar பாணியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிவிட்டர் கணக்கானது பாதுகாப்பு ஆராய்ச்சி, கலைஞர், நையாண்டி போன்ற அடையாளங்களைக் கொண்டதாகும்.

பெடரல் பாராளுமன்றத்தில் உள்ள தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ஜேர்மனியின் அரசியல் கட்சிகளையும் குறிவைத்தே இந்த ஹேக்கிங் நடந்துள்ளதாக தெரிகிறது. ஆனால், வலதுசாரி கட்சியான AfD மட்டும் இதனால் பாதிக்கப்படவில்லை.

வெளியான தகவல்களில் பெரும்பாலும் முகவரிகள், செல்போன் எண்கள் ஆகும். எனினும் மிகவும் ரகசியமாக இருக்க வேண்டிய ஆவணங்கள், வங்கி மற்றும் நிதி விவரங்கள், ஐ.டி கார்டு மற்றும் தனிப்பட்ட அரட்டைகள்(Chat) ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால், பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய ஆவணங்கள் எதுவும் இதில் வெளியாகவில்லை. ஒரு வருடம் பழமை வாய்ந்த ஆவணங்கள், வேலை வாய்ப்பு படிவங்கள், கட்சி குறிப்புகள் ஆகியவையே வெளியிடப்பட்டுள்ளன.

கசிந்த ஆவணங்கள் எந்த விதமான தெளிவான வடிவங்களில் இல்லை. அத்துடன் யார்? எதற்காக இதனை செய்தார்கள் என்பதையும் அறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers