கவர்ச்சி படங்களால் பிரபலமான ஜேர்மன் பெண்! பொலிசார் எடுத்த முடிவு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சிப் படங்களை வெளியிடுவதால் பிரபலமான, ஜேர்மனியின் மிக அழகான பெண் பொலிஸ் என்று அழைக்கப்படும் Adrienne Koleszar (34), விடுப்பு எடுத்துக் கொண்டு உலகத்தைச் சுற்றி வந்தார்.

ஒன்றில் பொலிஸ் பணியில் இருங்கள் அல்லது இன்ஸ்டாகிராம் மொடலாக இருங்கள் என்று அவரை பொலிஸ் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் தனது எதிர்காலம் குறித்த முடிவை எடுத்துவிட்டதாக Adrienneதெரிவித்துள்ளார்.

நீச்சல் உடையில் கவர்ச்சியாக இருக்கும் தனது படங்களை பதிவிடும் Adrienneஐ இன்ஸ்டாகிராமில் 600,000பேர் பின்தொடர்கின்றனர்.

ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக பொலிஸ் உடையில் தனது படத்தை பதிவிட்டAdrienne, தான் வேலையில் சேர முடிவெடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

தனது உயர் அதிகாரிகளிடம் பேசியபோது, பொலிஸ் வேலைக்கு மீண்டும் திரும்பினால் கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் எனஅவர்கள் நிபந்தனை விதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நான் மீண்டும் பொலிஸ் வேலைக்கு போகிறேன், எனது சீருடையை மீண்டும் அணிந்து கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ள Adrienne, ஆனாலும் நான் இன்ஸ்டாகிராமில் இருப்பேன், கடந்த ஆறு மாதங்களில் இருந்தது போல் அல்ல, ஜூலை 1க்கு முன் இருந்தது போல இருப்பேன் என்று கூறியுள்ளார் Adrienne.

தான் பணியில் இருக்கும்போது சில நேரங்களில் இளம்பெண்கள் தன்னுடன் செல்பி எடுத்துக் கொள்ள விரும்புவதுண்டு என்று கூறும் Adrienne, நான் இன்ஸ்டாகிராமில் இருப்பதால் எனனை யாரும் இதுவரை மரியாதைக் குறைவாக நடத்தியதில்லை என்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers