கடும் பனிப்பொழிவால் முனிச் விமான நிலையத்தில் ரத்து செய்யப்படும் விமானங்கள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியில் தொடர்ந்து பனிப்பொழிவு காரணமாக முனிச் விமான நிலையத்தின் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்படுவதையும் நீண்ட கால தாமதங்களையும் எதிர்கொள்கின்றனர்.

ஏறக்குறைய 120 விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் தொடர்ந்து விமானங்கள் ரத்தாக வாய்ப்பு இருக்கறிது என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் முனிச் விமான நிலையம் ஆகும்.

வானிலை மாறும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் பயணிகள், தங்கள் பயணம் குறித்த தகவல்களை முன்கூட்டியே உறுதி செய்த பின்னர் விமான நிலையத்திற்கு வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers