பனிப்புயலால் ஏழு பேர் உயிரிழப்பு, ஏராளமானோர் வெளியேற்றம்: ஜேர்மனி, ஆஸ்திரியாவில் பெரும் குழப்பம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

வார இறுதி முதல் வீசிவரும் பனிப்புயலால் ஜேர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை ஏழு பேர் பலியாகியுள்ளதோடு பனிச்சறுக்கு ரிசார்ட்டுகளிலிருந்து ஏராளமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வரும் நாட்களில் இன்னும் நான்கு அடிக்கு பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பனிப்பொழிவு காரணமாக பலர் உயிரிழந்துள்ள நிலையில், பனிப்பாறைச் சரிவு அபாயம் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆஸ்திரியாவில் 28 வயது ஆண் ஒருவரும் 23 வயது பெண் ஒருவரும் காணாமல் போன நிலையில், பின்னர் Salzburg பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்கள்.

இதற்கிடையில் Hohenberg பகுதிக்கருகில் காணாமல் போன இன்னும் இருவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர் 40 பேர், மோப்ப நாய்களுடன் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறார்கள்.

ஜேர்மனியில் 44 வயதுள்ள ஒருவர், பவேரியா பகுதியிலுள்ள Wackersbergஇல் பனிப்பொழிவால் விழுந்த மரத்தினடியில் சிக்கி உயிரிழந்தார்.

பனிப்பாறைச் சரிவில் சிக்கி ஆஸ்திரியாவில் மூன்று பனிச்சறுக்கு வீரர்களும், சீதோஷ்ணம் தொடர்பான சம்பவம் ஒன்றினால் பவேரியாவில் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனியின் பவேரியா பகுதியில் அதிக பனிப்பொழிவு காரணமாக அதிகாரிகள் சாலைகளையும் சில ரயில் பாதைகளையும் மூடியுள்ளனர். பள்ளிகளும் மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers