ஜேர்மனியில் அரசியல் கட்சி தலைவர் மீது கொடூர கொலை முயற்சி

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனியில் தெருவில் நடந்து சென்ற அரசியல் கட்சி தலைவர் மீது முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் AFD கட்சியின் தலைவரான ஃபிராங்க் மக்னிட்ஸ், தற்போது பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

தீவிர வலதுசாரி ஜேர்மன் அரசியல்வாதியான இவர், திங்கட்கிழமையன்று முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்களால் மோசமான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனை பார்த்த கட்டுமான தொழிலாளர் ஒருவர் தடுத்து நிறுத்தியதும், தாக்குதல் நடத்திய மூன்று நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்கள்.

தற்போது தாக்குதலுக்குள்ளான ஃபிராங்க் மேக்னிட்ஸ் புகைப்படத்தை கட்சியினர் தங்களுடைய அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக்கூறி கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இது ஒரு கொலைமுயற்சியாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஜேர்மனி ஜனநாயகத்தில் இன்று கறுப்புநாள் என அரசியல் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers