இறந்துபோன இளவரசர் ஜார்ஜின் கடைசி நிமிடங்கள்: காதல் மலர்ந்த இடத்திலேயே உயிரும் போனது

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மன் இளவரசர் ஜார்ஜ் குதிரை விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது கடந்த ஆண்டு யூலை 14 ஆம் திகதி தவறி விழுந்து உயிரிழந்தபோது நடந்தவை குறித்து அவரது நண்பர் Baron von Pfetten நீதிமன்றத்தில் விவரித்துள்ளார்.

ஜேர்மன் இளவரசர் 41 வயதான ஜார்ஜ், இங்கிலாந்து பெண்ணான Olivia Rachelle Page என்பவரை காதலித்து 2015 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்னர், ஜேர்மனை விட்டு லண்டனில் குடிபெயர்ந்து வசித்து வந்தார்.

இளவரசர் ஜார்ஜின் மரணம் குறித்து Northampton Coroners நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜார்ஜின் கடைசி நிமிடங்கள் குறித்து நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க கூறியுள்ளார் நண்பர் Baron von Pfetten.

எனது தோட்டத்து அரண்மனையில் நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தோம்.

குதிரையை கையாளுவதில் மிகவும் கைதேர்ந்தவர் ஜார்ஜ். அவர் குதிரையில் இருந்து விழுந்ததும் நான் உடனடியாக சென்று பார்த்தேன். அவரது இதயத்துடிப்பு இருந்தது. உடனே, அவரது நெஞ்சை கையை வைத்து அமர்த்தினேன்.

ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

ஜேர்மனியை விட்டு வந்தாலும் இங்கிலாந்தில் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அவர் எந்த அரண்மனையில் வைத்து தனது மனைவி Olivia யிடம் காதலை தெரிவித்தாரோ, அதே அரண்மனையில் அவர் உயிரிழந்துள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers