ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு திருநங்கை கொடுத்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

மூன்று மாதங்கள் விடுமுறை முடிந்து ஜேர்மன் நாடாளுமன்றத்திற்கு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், வழக்கமாக ஒரு குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரும் இருக்கையில் ஒரு திருநங்கை அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Markus Ganserer என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த திருநங்கையை உற்றுப் பார்த்த FDP கட்சியின் உறுப்பினர் ஒருவர், என்ன பெண் வேடம் போட்டு வேடிக்கை செய்ய வந்திருக்கிறீர்களா? என்றே கேட்டு விட்டார். பின்னர்தான் தெரியவந்தது, Markus Ganserer ஒரு திருநங்கையாக மாறிவிட்டார் என்பது.

இப்போது தன்னை Tessa Ganserer என்று அழைத்துக் கொள்ளும் Ganserer, தனக்குள் ஒரு Markusம் ஒரு Tessaவும் இருந்ததை தான் பத்தாண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்ததாகவும், இனி ஒரு பெண்ணாகவே வாழ முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

என்றாலும் அவரது அடையாள அட்டை முதலான விடயங்களில் மாற்றங்கள் செய்ய இன்னும் காலம் செல்லும்.

அதற்கான நடவடிக்கைகளின் ஒரு படியாக, Ganserer தான் ஒரு திருநங்கை என மனோவியல் நிபுணர் ஒருவரிடமிருந்து மருத்துவச் சான்றிதழ் பெற்று விட்டார்.

அவரது மகன்கள் இருவரும் கூட தன்னை ஏற்றுக் கொண்டதையறிந்து மகிழ்ச்சியடைந்துள்ள Ganserer, தனது சகாக்களிடமிருந்து வாழ்த்துகளை பெற்று வருகிறார்.

பவேரியா பழமைவாதமும் கத்தோலிக்கப் பின்னணியும் கொண்ட பகுதியாக இருந்தும், உள்ளூர் நாடாளுமன்றத்தின் தலைவரான CSU கட்சியின் Ilse Aignerம் Gansererக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

Ganserer மிக தைரியமான, அதே நேரத்தில் மிகவும் தனிப்பட்ட ஒரு முடிவை எடுத்துள்ளார் என்கிறார் அவர்.

நமது ஆண் சகா, ஒரு பெண் சகாவாக மாறியிருக்கிறார், நமது நாடாளுமன்றத்தைப் பொருத்தவரையில் அது ஒரு பிரச்சினையே அல்ல என்று கூறியுள்ளார் Ilse Aigner.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்