விமான பாதுகாப்பு பணியாளர்களின் போராட்டம்: ரத்து செய்யப்பட்ட விமானம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

விமான பாதுகாப்பு பணியாளர்களின் போராட்டத்தின் காரணமாக Frankfurt விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

DBB மற்றும் Verdi தொழிற்சங்கங்கள் கூறியுள்ளதாவது, உள்ளூர் நேரப்படி காலை 2 மணி முதல் 8 மணிவரை Hamburg, Munich, Leipzig, Hanover மற்றும் Frankfurt விமான நிலையங்களில் விமானம் ரத்து செய்யப்பட்டது.

தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக மட்டுமல்லாமல் சம்பள உயர்வுக்காகவும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

தொழிலாளர்கள் ஒரு மணி நேர ஊதியம் 20 யூரோ தேவை என்று கோருகின்றனர். தற்போது, ஜேர்மனியில் விமான பாதுகாப்புப் பணியாளர்கள் 11.30 யூரோ முதல் 17.16 யூரோ வரை பெறுகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்