பேண்ட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த உயிருள்ள பாம்பு! விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Kavitha in ஜேர்மனி

ஜெர்மனி தலைநகர் பெர்லினின் சோபெல்ட் விமான நிலையத்தில் பேண்டிற்குள் உயிருள்ள பாம்பை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் செல்லும் விமானத்தை பிடிக்க 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் விமான நிலையத்துக்கு அவசர அவசரமாக வந்துள்ளார்.

விமான நிலைய காவல் அதிகாரிகள், இவரது நடவடிக்கையை பார்த்து சந்தேகமடைந்து அந்த நபரை பிடித்து சோதனை செய்துள்ளனர்.

சோதனையின் போது அவரது பேண்டிற்குள் ஒரு துணிப்பையை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் அந்த பையை பிரித்து பார்த்தபோது, சுமார் 16 இன்ஞ்ச் நீளமுள்ள பாம்பு ஒன்று இருந்தது. இதை பார்த்த காவல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக அந்த நபரை உடனடியாக கைது செய்து பாம்பையும் மீட்டுள்ளனர்.

மேலும் அந்த நபர் கடத்த முயன்ற பாம்பு விஷத்தன்மையற்ற பாம்பு வகையை சேர்ந்தது என்றும் இந்த பாம்பை எடுத்து செல்வதற்கான முறையான ஆவணங்கள் பிடிப்பட்ட நபரிடம் இல்லை எனவும் பிடிபட்ட நபர் பாம்பை காட்டி மிரட்டி, விமானத்தை கடத்த முயல்வதற்காக இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என ஜெர்மன் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் நடந்து 20 நாட்கள் கழித்து, இதுகுறித்து செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்