14 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட இலங்கை மந்திரி! ஜேர்மனியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்

Report Print Santhan in ஜேர்மனி

இலங்கையின் முன்னாள் வெளியுறவு மந்திரி லட்சுமணன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், விடுதலைப் புலியைச் சேர்ந்த நபர் ஜேர்மனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் வெளியுறவு மந்திரியான லட்சுமணன் கதிர்காமர்(73,), கடந்த 2005-ஆம் ஆண்டு ஆகஸ் மாதம் 12-ஆம் திகதி கொழும்புவில் தனது பங்களாவில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைக்கு விடுதலை புலிகள் இயக்கம் பொறுப்பு ஏற்றது. அதன் பின் கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த போரின் போது விடுதலை புலிகள் இயக்கம் தோல்வியடைந்ததால், விடுதலை புலிகள் இயகத்தைச் சேர்ந்த நபர்கள் பல்வேறு நாடுகளில் தங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் உளவுப் பிரிவைச் சேர்ந்த நவனீதன் (39) என்பவர் ஜேர்மனியில் லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கு தொடர்பாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியின் தனியுரிமை சட்டப்படி கைதான விடுதலைப்புலியின் உண்மையான பெயர் வெளியிடப்படவில்லை.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கொல்ல முயன்றதாகவும் இவர் மீது மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்