போகாதே... ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்கு ஒரு காதல் கடிதம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அடுத்து ஜேர்மன் அதிபராகவிருக்கும் Annegret Kramp-Karrenbauer உட்பட பலர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டாம் என்று பிரித்தானியாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதம் இப்படி கூறுகிறது, ‘இரண்டாம் உலகப்போரின் கோர நிகழ்வுகளுக்குப்பின் பிரித்தானியா எங்களைக் கைவிடவில்லை.

எங்களை அது மீண்டும் ஒரு இறையாண்மை மிக்க நாடாக, ஒரு வல்லமை மிக்க ஐரோப்பிய நாடாக வரவேற்றது.

ஜேர்மானியர்களாக நாங்கள் அதை மறக்கவில்லை, அத்துடன் நாங்கள் நன்றியுடையவர்களாகவும் இருக்கிறோம்.

பிரித்தானியர்களுக்கு எப்போதுமே ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் நண்பர்கள் இருப்பார்கள் என்று கூறும் அந்த கடிதம், மாற்ற முடியாத முடிவு என்று எதுவுமே இல்லை என்கிறது.

பிரித்தானியர்கள் அறிமுகம் செய்த பால் சேர்த்த டீ, சாலையின் இடது புறம் வாகனம் ஓட்டுதல், panto at Christmas என்னும் கலை நிகழ்ச்சி, கெட்டவை என கருதப்படும் விடயங்களையும் நகைச்சுவையாக சித்தரிக்கும் black humour, வேலை முடிந்ததும் பொழுது போக்க மதுபான விடுதிக்கு செல்லுதல் ஆகியவற்றையும் நினைவுகூறுகிறது அந்த கடிதம்.

பிரெக்சிட்டை கைவிட வேண்டும் என்று கோரி, பிரித்தானியாவின் மீது விருப்பமும் அன்பும் கொண்ட 31 பிரபலங்கள் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

முன்னாள் கோல் கீப்பரான Jens Lehmann, தொழிலதிபர்களான Thomas Enders போன்றோரும் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்