தன்னை சீரழித்த அகதிகளை புத்திசாலித்தனமாக கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுத்த சிறுமி

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனியில் காட்டுப்பகுதியில் வைத்து தன்னை துஸ்பிரயோகம் செய்த சிறுவர்களை, புத்திசாலித்தனமாக செயல்பட்டு சிறுமி ஒருவர் தண்டனை வாங்கிக்கொடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு ஜேர்மானிய மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் வேல்பர்ட்ட் பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் பொழுதை கழித்த 13 வயது சிறுமி தனியாக காட்டு வழியில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது ஜேர்மனிய நாட்டிற்கு குடிபெயர்ந்த 8 சிறுவர்கள், வழிமறித்து சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

இதற்கிடையில் நீண்ட நேரமாக சிறுமி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர் காட்டு வழியே தேடி சென்றுள்ளார். அப்போது அவரை கண்ட சிறுவர்கள் அப்படியே சிறுமியை விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் உறவினர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதேசமயம் சிறுமியும் பேஸ்புக் மூலம் தன்னை சீரழித்த சிறுவர்களை தேடும் வேலையில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

இதன்பலனாக இறுதியில் ஒரு சிறுவனின் புகைப்படத்தை கண்டறிந்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பின்னர் அந்த சிறுவனை கைது செய்த பொலிஸார் அவனுடைய செல்போனை ஆய்வு செய்த போது, சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வீடியோ இருந்தது.

அதன்மூலம் மற்ற 7 சிறுவர்களையும் பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் அனைவரும் கிழக்கு பல்கேரியாவில் துருக்கிய சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதில் சம்மந்தப்பட்ட சிறுவர்கள் அனைவரும் 14 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களாக இருந்துள்ளனர். முக்கிய குற்றவாளியான 15 வயது சிறுவனுக்கு 4 ஆண்டுகள் 9 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. மற்றொரு பள்ளி சிறுவனுக்கு 4 ஆண்டுகளும், வேறு இருவருக்கு 2 ஆண்டுகள் 20 மாதங்களும், மற்ற 15 வயது சிறுவனுக்கு 2 ஆண்டுகள் 9 மாதங்ளும், 15 மாத சிறைத்தண்டனை குற்றம் சுமத்தப்பட்ட மற்றொரு சிறுவனுக்கும் வழங்கப்பட்டது.

இவர்களுக்கான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வாரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட சிறுவர்கள் 8 பேரும் பல்கேரியாவிற்கு தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரையும் கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers