ரயிலிருந்து சிகரெட் பிடிக்க வெளியே வந்த நபருக்கு நேர்ந்த கதி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் சிகரெட் பிடிப்பதற்காக ரயிலிலிருந்து இறங்கிய 33 வயதுள்ள ஒருவர், திடீரென ரயில் புறப்பட்டதால், தாவி ஏற முயன்றபோது இரண்டு பெட்டிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டார்.

மதுபோதையில் இருந்ததால், அவரால் சரியாக ரயில் பெட்டியில் ஏற இயலவில்லை.

Hamburg நோக்கி மணிக்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் சென்று கொண்டிருந்த அந்த ரயிலில், இரண்டு பெட்டிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட அவரது அலறல் கேட்ட மற்ற பயணிகள், ரயிலை நிறுத்தும் அலாரம் உதவியால் ரயில் ஓட்டுநருக்கு தகவலளிக்க, ரயில் நிறுத்தப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக அந்த நபர் காயங்கள் எதுவுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டார்.

பின்னர் அவர் Essen ரயில் நிலையத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் பொலிசாரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். பொலிசார் அவரை விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers