ஏலத்தில் விடப்பட்ட ஹிட்லர் வரைந்த போலியான ஓவியம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் ஹிட்லர் வரைந்ததாக அறிமுகம் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்ட 3 ஓவியங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

நாஜி அமைப்பை தொடங்குவதற்கு முன்னர் ஓவியர் ஆக வேண்டும் என்பது ஹிட்லரின் ஆசையாக இருந்துள்ளது. அவர் அதிகமான ஓவியங்களை வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெர்லினில் உள்ள Kloss ஏல இல்லத்தில் 1910 ஆம் ஆண்டு ஹிட்லர் வரைந்ததாக கூறப்பட்டு அவரது ஓவியம் ஏலத்தில் விடப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்ததையடுத்து, அங்கு சென்று சோதனை செய்ததில், அது ஹிட்லர் வரைந்த ஓவியமே கிடையாது, வேறு ஒரு ஓவியத்துடன் ஹிட்லரின் கையெழுத்தை கீழே எழுதி ஏலத்தில் விட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது அந்த ஓவியங்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers