யூத இனப்படுகொலைக்கு காரணம் ஜேர்மனிதான்: போலந்து பிரதமர் அதிரடி குற்றச்சாட்டு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

யூத இனப்படுகொலைக்கு ஜேர்மனிதான் காரணமேயொழிய நாஸிக்கள் அல்ல என்று போலந்து பிரதமர் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கியமான சித்திரவதை முகாம்களில் ஒன்றாகிய, போலந்தில் அமைக்கப்பட்ட Auschwitz-Birkenau சித்திரவதை முகாமிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்ட நாளை நினைவுகூறும் நிகழ்ச்சியில் நேற்று பேசிய போலந்து பிரதமர் Mateusz Morawiecki, யூத இனப்படுகொலைக்கு காரணம் ஹிட்லரின் ஜேர்மனிதானேயொழிய நாஸிக்கள் அல்ல என்றார்.

ஹிட்லரின் ஜேர்மனி பாசிஸ தத்துவங்களை ஊட்டி வளர்க்கப்பட்டது.

ஆனால் தீமை அனைத்துமே ஜேர்மனியிலிருந்துதான் வந்தது என்பதை நாம் மறக்க இயலாது, அப்படி மறந்தால் நாமே தீமையுடன் தொடர்புடையவர்களாகி விடுவோம் என்றார் அவர்.அந்த காலகட்டத்தைக் குறித்த முழு உண்மையையுமே பாதுகாக்க நான் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன் என்றார் Mateusz.

நேற்று நடைபெற்ற அந்த விழாவில் சித்திர வதை முகாம்களில் கைதிகளாக இருந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

நாஸி ஜேர்மன் குற்றங்களுடன் தொடர்பு படுத்தி போலந்து நாட்டை குற்றம் சாட்டுவதை சட்ட விரோதமாக்கும் சட்டம் ஒன்று கடந்த ஆண்டு போலந்தில் உருவாக்கப்பட்டதையடுத்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலும், அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்படுவதையும் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதையும் ரத்து செய்து சட்டதிருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது.

வரலாற்றாளர்கள் யூத இனப்படுகொலைக்கு காரணமாக எப்போதும் நாஸிக்களை மட்டுமே கூறும் நேரத்தில் ஜேர்மனியின் பங்கை குறிப்பிடாமல் விட்டு விடுவதுண்டு.

அதானாலேயே Mateusz இவ்வாறு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனி ஆக்கிரமிப்பு போலந்தில் அமைக்கப்பட்ட Auschwitz-Birkenau சித்திரவதை முகாமில் 1940க்கும் 45க்கும் இடையே ஒரு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டதையடுத்து அது நாஸி ஜேர்மனியின் இனப்படுகொலையின் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது.

யூதர்கள் தவிர ஒரு லட்சம் போலந்து, ரோம மற்றும் சோவியத் போர்க்கைதிகளும், நாஸி எதிர்ப்பாளர்களும் அந்த இடத்தில் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers