பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஜேர்மன் நாட்டிற்குள் சட்டவிரோதமாக பேருந்து அல்லது ரயில்கள் வழியாக நுழைவதற்கு முயற்சிக்கின்றது என்று ஜேர்மனியின் கூட்டாட்சி பொலிஸ் தெரிவித்துள்ளது.
பெரும்பாலனர்வள் அண்டை நாடான ஆஸ்திரியா வழியாக வருகின்றனர் என தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் பேருந்துகள் மற்றும் ரயில்களில் சட்டவிரோதமாக நாட்டிற்கு 14,000 க்கும் அதிகமானோர் வந்துள்ளனர்.
உள்நாட்டு மத்திய பொலிஸ் ஆவணத்தில், ஜேர்மனியில் 8,000 புலம்பெயர்ந்தோர் பேருந்து வாயிலாகவும், ரயில்களில் 6,000 க்கும் அதிகமானவர்கள் வந்துள்ளதாகவும் இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான், நைஜீரியா, ஈராக், சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக இருந்துள்ளனர்.
ஆஸ்திரியா எல்லை பகுதிக்கு அடுத்தபடியாக சுவிஸ் மற்றும் சுவிட்சர்லாந்து வழியாகவும் ஜேர்மன் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்.