கவர்ச்சிப்படங்களால் பிரபலமான பெண் பொலிசுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கவர்ச்சிப்படங்களால் பிரபலமான ஜேர்மன் பெண் பொலிசார், தன் வாழ்வில் துயரமான சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜேர்மனியின் கவர்ச்சியான பெண் பொலிசார் என்று பெயர் பெற்ற Adrienne Koleszar, சமீபத்தில் மீண்டும் பொலிஸ் வேலைக்கு திரும்பிய நிலையில், இந்த ஆண்டு நான் எடுத்துள்ள இரண்டாவது முக்கிய முடிவு என்று கூறி தனது காதலருடன் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் தனது காதலருடன் கைகோர்த்து செல்வதுபோன்ற படத்துடன் ’விடைகள் இல்லை, ஆனால் ஏராளமான கேள்விகள்! விடுதலை பெற்ற இரண்டு மனிதர்கள், நங்கள் பிரிந்து விட்டோம்’ என்று எழுதப்பட்டுள்ளது.

அதாவது ஜேர்மனியின் கவர்ச்சியான பெண் பொலிசின் காதலர் அவரை கைவிட்டுச் சென்றுவிட்டார்.

இன்ஸ்டாகிராமில் அவர் புகழ் பெற்றதை பொறுக்க இயலாததாலேயே அவரது காதலர் அவரை கைவிட்டு சென்றதாக தெரியவந்துள்ளது.

Adrienne கவர்ச்சிப்படங்களை அதிகம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்ததையடுத்து அவரை அழைத்து எச்சரித்த உயர் அதிகாரிகள், மொடலிங்கா, பொலிஸ் வேலையா? இரண்டில் ஒன்றை முடிவு செய்யுங்கள் என்று கூறிவிட்டனர்.

ஆறு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றிய பின்னர், மீண்டும் வேலைக்கு திரும்புவதாக இந்த மாதம் முடிவெடுத்தார் Adrienne.

அதற்குப் பிறகு தான் எடுக்கும் இரண்டாவது முடிவு இது என தனது காதலருடனான பிரிவு குறித்து, அவர் அவரைப் பின்தொடரும் 700,000 பேரும் காண்பதற்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது ஒரு பொலிஸ் கமிஷனராக பணியாற்றும் Adrienne, மாதம் ஒன்றிற்கு 2,700 யூரோக்கள் ஊதியம் பெறுகிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers