அந்தரங்க உறுப்பில் ஹெராயின்: காதலியுடன் நெருக்கம் காட்டிய மருத்துவர்! இறுதியில் நடந்தேறிய சோகம்

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனியில் அந்தரங்க உறுப்பில் ஹெராயின் வைத்து உறவு கொண்டதால் காதலி இறப்பதற்கு காரணமான மருத்துவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜேர்மனியின் சாக்சனி-அன்ஹால்ட்டில் உள்ள ஹால்பெர்ஸ்டாட் நகரில் Plastic, Aesthetic மற்றும் Hand Surgery க்கான அமியோஸ் கிளினிக்கில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் 43 வயதான Niederbichler.

இவர் ஆன்லைன் மூலம் 38 வயதான Yvonne என்கிற பெண்ணை சந்தித்து காதலிக்க ஆரம்பித்துள்ளார். அதன்பிறகு இருவரும் பல நேரங்களில் நெருக்கமாக இருந்துள்ளனர்.

மருத்துவர் மீது இருந்த அதீத காதலால், Yvonne தன்னுடைய கணவரை விட்டு பிரிய முடிவெடுத்துள்ளார்.

இதற்கிடையில் ஒரு நாள் Niederbichler தன்னுடைய அந்தரங்க உறுப்பில் தடை செய்யப்பட்ட ஹெராயினை வைத்து Yvonne உடன் உறவு வைத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட Yvonne, திடீரென துடிக்க ஆரம்பித்துள்ளார். இதனை பார்த்து பயந்து போன மருத்துவர் வேகமாக மருத்துவமனைக்கு எடுத்து சென்று, சிகிச்சை உட்படுத்தியுள்ளார். ஆனால் அதற்குள் Yvonne பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும்பொழுது, 2015 முதல் 2018ம் ஆண்டிற்குள் இதேபோன்று வேறு மூன்று பெண்களுடன் மருத்துவர் நெருக்கம் காட்டியிருப்பது தெரியவந்தது.

வழக்கு விசாரணைகளை கேட்டறிந்த நீதிபதி குற்றவாளிக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers