ஜேர்மனியில் ஈராக் அகதிகள் மூவர் கைது: தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஈராக் அகதிகள் மூவரை டென்மார்க்கை ஒட்டியுள்ள ஜேர்மன் எல்லையில் ஜேர்மன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வடக்கு ஜேர்மனியின் Dithmarschen பகுதியில் 23 வயதான ஷாஹின், ஹெர்ஷ் மற்றும் 36 வயதான ராஃப் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாத தாக்குதல் ஒன்றிற்கு திட்டமிட்டதற்காக அவர்கள் மூவரும் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

பல மாதங்கள் நீண்ட புலன் விசாரணைக்குப்பின், Schleswig-Holstein பகுதியில் இன்று காலை நடந்த ரெய்டில் அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டாலும், எந்த இடத்தையும் இன்னும் தாக்குதலுக்காக தேர்ந்தெடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மீது, பட்டாசு செய்ய பயன்படுத்தப்படும் வெடி மருந்தை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரித்ததாகவும், மூன்றாவது நபர் மீது, தீவிரவாத திட்டங்களுக்கு உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஷாஹின் மற்றும் ஹெர்ஷ் ஆகிய இருவரும் இணையத்திலிருந்து வெடிகுண்டு தயாரிக்கும் முறையை பதிவிறக்கம் செய்ததாகவும், வெடியை வெடிக்கச் செய்ய உதவும் கருவியை பிரித்தானியாவிலிருந்து வாங்க முயன்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய அதிகாரிகள் ஜேர்மனிக்கு அனுப்பப்பட இருந்த அந்த கருவியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதேபோல் அந்த இருவரும் ராஃபின் உதவியுடன் கைத்துப்பாக்கி ஒன்றை வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைத்துப்பாக்கியின் விலை மிக அதிகமாக இருந்ததால், வாகனம் ஒன்றின் உதவியால் தாக்குதல் நடத்தும் திட்டத்தில் இறங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்காக ஷாஹின் இம்மாத துவக்கத்தில், டிரைவிங் பயிற்சி பெறவும் துவங்கியுள்ளான்.

2018ஆம் ஆண்டு இறுதியில், ஷாஹினும் ஹெர்ஷும் ஜேர்மனியில் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் ஒன்றை நிகழ்த்த முடிவு செய்திருந்தார்கள் என்ற தகவலும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவருக்கும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers