9 வயது மகனை பாலியல் தொழிலுக்கு விற்ற தாய்: ஜேர்மனின் மிக மோசமான வழக்கு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில் ஜேர்மனியின் மிக மோசமான வழக்காக 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் எடுத்துரைக்கிறது.

Freiburg நகரில் 9 வயது சிறுவன் தனது தாய் மற்றும் அவரது காதலனால் கடந்த 2 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

சிறுவனை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதனை darknet ஆபாச தளத்தில் பதிவிட்டுள்ளார் காதலன். இந்த புகைப்படத்தை பலரும் சிறுவனை பாலியல் தொழிலுக்கு விலை பேசியுள்ளனர்.

பணத்திற்காக தனது மகனை சிறுவன் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்துள்ளார். கற்பழிப்பு மற்றும் கட்டாய பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் தாய் மற்றும் காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 100 பக்க அளவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜேர்மனி முழுவதும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இதுவரை விசாரணை செய்த மோசமான குழந்தை பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் ஒன்றாக இது உள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers