ஜேர்மானியர்களை மாற்றிய ஒரு தொலைக்காட்சித்தொடர்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அது ஒரு பெரிய பட்ஜெட் தொலைக்காட்சித்தொடர், பெரிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருந்தார்கள்.

அதுவரை அணுகப்படாத ஒரு கோணத்தில் யூத இனப்படுகொலையை கண் முன் காட்டியது அந்த தொடர்.

1979இல் மேற்கு ஜேர்மனியில் சுமார் 20 மில்லியன் மக்கள் அந்த தொலைக்காட்சி தொடரைப் பார்த்தார்கள்.

அதுவரை சீரியஸான ஆவணப்படங்கள் நடந்த சில சம்பவங்களையும் படங்களையுமே காட்டிய நிலையில், இந்த தொடர் ஹிட்லரால் பாதிக்கப்பட்டவர்களின் அன்றாட வாழ்வின் அல்லல்களைக் காட்டியது.

ஒளிபரப்பப்பட்டபோது தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது அந்த தொடர். தொடரைப் பார்த்த 86 சதவிகிதம் மக்கள் யூத இனப்படுகொலை குறித்து தங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் விவாதித்ததாக ஆய்வுகளின் முடிவுகள் கூறின.

தொடரைப் பார்த்த 10,000 ஜேர்மானியர்கள் தொலைக்காட்சி நிலையத்திற்கு போன் செய்து கண்ணீருடன், தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் அவமானத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

சில முன்னாள் போர் வீரர்கள் நாஸி குற்றங்கள் குறித்து விசாரித்து உண்மைகளை உறுதி செய்து கொண்டார்கள்.

உண்மையான இனப்படுகொலைக்குத் தப்பி வந்தவர்களை பத்திரிகைகள் பேட்டி எடுக்கக்கூட இல்லை.

பாதிக்கப்பட்டவர்கள் மீது யாரும் அக்கறை காட்டவில்லை. ஆனால் ’இனப்படுகொலை’ என்னும் இந்த தொலைக்காட்சித்தொடர் அவற்றையெல்லாம் முற்றிலும் மாற்றியது.

அந்த தொடர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்போவதை அறிந்த நியோ நாஸிக்கள் அதை தடுத்து நிறுத்துவதற்காக, இரண்டு தொலைக்காட்சி ட்ரான்ஸ்மிட்டர்களை வெடிகுண்டு வைத்து தகர்த்தனர்.

ஆரம்பத்தில் சில ஜேர்மன் அதிகாரிகள் இந்த தொடர் ஜேர்மனி குறித்த எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் என அஞ்சிய நிலையில், அதற்கு மாறாக கடந்த கால குற்றங்களை ஜேர்மனி எப்படி எதிர்கொள்ளுகிறது என்பது குறித்த மரியாதையைத்தான் அந்த தொடர் ஏற்படுத்தியதைக் கண்டார்கள்.

மீண்டும் இந்த மாதம் ஒளிபரப்பப்பட்ட அந்த தொடர் முடிவுக்கு வரும் நிலையில், இனப்படுகொலை என்ற பெயர் கொண்ட அந்த தொடர் 40 ஆண்டுகளுக்குமுன் ஜேர்மனியை எப்படி மாற்றியது என்பதை மறுபரிசீலனை செய்து பார்க்கிறார்கள் ஜேர்மானியர்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers