ஜேர்மனில் அகதி சிறுவர்கள் பாலியல் தொழிலாளிகளாக்கப்படும் பரிதாபம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் உள்ள பெர்லின் பூங்காவில் ரோமானிய பெற்றோர் தங்களது குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Berlin's Tiergarten பூங்காவில் வைத்து நான்கு ரோமானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களது வயது 25 முதல் 55 வரை ஆகும். இவர்களது தங்களது சிறு வயது பிள்ளைகள் மட்டுமல்லாமல் பிற குழந்தைகளையும் பணத்திற்காக பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இவர்ள் ஒரு நெட்வார்க்காக இருந்து இப்படி ஓரு தொழிலை செய்து வந்துள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பெர்லின் Tiergarten பூங்கா, ஒரு மோசமான போதை மருந்து பயன்படுத்தும் இடமாகவும் மற்றும் இளம் சிறுவர்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் இடமாகவும் மாறிவருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடற்ற அகதிகள் மற்றும் ருமேனியா, பல்கேரியா போன்ற நாடுகளல் வந்திருக்கும் இளைஞர்கள் பாலியல் தொழிலுக்கு ஆளாகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers