ஜேர்மனில் இனவாதத்தின் அடிப்படையில் சிரிய பெண்கள் மீது தாக்குதல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

சிரிய பெண்கள் மீது பெர்லின் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இனவாதத்தின் அடிப்படையில் நடந்தது என பொலிசார் சந்தேகித்துள்ளனர்.

பேர்லினில் வெளிப்படையான இனவெறி தாக்குதல்களில் மூன்று இளம் பெண்கள் குறிவைக்கப்பட்டது குறித்து ஜேர்மன் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.

ஷாப்பிங் மாலில் இளைஞர் ஒருவர் மூன்று சிரிய பெண்களை இழுத்து தாக்கியுள்ளார், முகத்தில் பலமாக குத்தியதில் அவர்களுக்கு ரத்தம் வந்துள்ளதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியில் இடம்பெயர்வு தொடர்பாக சந்தேகத்திற்கிடமான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 4 வயது ஆப்கான் சிறுவனும் 10 வயது சிரிய பெண்ணும் உள்ளிட்ட புத்தாண்டு தின தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்தனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers