பெர்லின் பொது போக்குவரத்து யூனியன்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து ஜேர்மன் தலைநகரான பெர்லின் ஸ்தம்பித்தது. என்றாலும் பலர் தங்கள் சைக்கிள்களில் வேலைக்கு புறப்பட்டார்கள்.
பேருந்துகளும் ட்ராம்களும் டெப்போக்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பயணிப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டியதாயிற்று.
சம்பளம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
2012க்கு பிறகு இதுதான் பெர்லினில் முதல் வேலை நிறுத்தமாகும். அதிகாலை விமானத்தைப் பிடிக்க வேண்டிய பலர் விமான நிலையம் செல்வதற்கு வழியின்றி திகைத்தனர்.
என்றாலும் 9 மணிக்கு பிறகு பெர்லின் விமான நிலையம் பேருந்துகளை இயக்கியதால் மக்கள் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
சிலர் கார்களில் பயணித்த நிலையில் பலர் நடந்தே வேலைக்கு புறப்பட்டனர். வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும், முழு சம்பளத்துடன், என யூனியன்கள் கோரியுள்ளன.
அதோடு இன்னும் வேலை நிறுத்தங்கள் நடைபெறலாம் என்றும் அவை எச்சரித்துள்ளன.