குட்டி ஹிட்லர் என அழைக்கப்படும் சிறுவன்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளை தடுப்பதற்காக அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் தடுப்புசுவர் அமைக்கவேண்டும் என கூறி, எல்லையில் நின்றுகொண்டு போராட்டம் நடத்திய சிறுவனை சிலர் குட்டி ஹிட்லர் என அழைக்கின்றனர்.

அதாவது, இச்சிறுவன் அமெரிக்க அதிபர் டிரம்பின் கொள்கைக்கு ஆதரவாக செயல்படுகிறான்.

மேலும், அங்கு நின்றுகொண்டு சொக்லேட்டுகளை விற்பனை செய்துவருகிறான், அதன் மூலம் கிடைக்கும் பணத்தினை வைத்து தடுப்புசுவர் அமைக்க கொடுக்கவிருப்பதாக தெரிவித்துள்ளான்.

ஒரு மணிநேரத்தில் மட்டும் $231 டொலர் மதிப்பில் சொக்லேட்டை விற்பனை செய்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்