வேலைக்கு விடுப்பு எடுக்கும் அழகிய பெண் பொலிஸ்: காரணமும் அழகுதான்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அழகிய பெண் பொலிஸ் ஒருவர் ஜேர்மன் அழகியாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து பொலிஸ் வேலைக்கு விடுப்பு எடுக்கவிருக்கிறார்.

இந்த ஆண்டிற்கான ஜேர்மன் அழகியாக Nadine Berneis (28)தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் துறையில், பொலிஸ் அதிகாரியாகவும், சைபர் கிரைம் அதிகாரியாகவும் பணியாற்றும் Nadine, ஜேர்மன் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையடுத்து ஓராண்டு விடுமுறைக்கு விண்ணப்பிக்க இருக்கிறார்.

என் கனவு பலித்து விட்டது என்று கூறும் Nadine, ஜேர்மனியின் சாக்ஸனியில் உள்ள Dresdenஐச் சேர்ந்தவர்.

இம்முறை முதன்முறையாக போட்டியாளர்கள் மாலைப் பொழுதில் அணியும் கவுன்கள் மற்றும் சாதாரண உடையணிந்து பூனை நடை பயின்றனர்.

இந்த ஆண்டு முதல் போட்டிகளில் நீச்சல் உடைக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளாக ஒரு பொலிசாராக பணியாற்றியுள்ளேன் என்று கூறும் Nadine, நான் இந்த பணியை தேர்ந்தெடுத்ததற்காக ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை என்கிறார்.

தற்போது ஜேர்மன் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையடுத்து அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதற்காக ஓராண்டு விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார் Nadine.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers